Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏப்ரல்-மே, 2015: மியூச்சுவல் ஃபண்டுகளின் முதலீடு ரூ.1.12 லட்சம் கோடி!

நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு (ஏப்ரல், மே) மாதங்களில்  மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ. 1.12 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக ஆம்ஃபி அமைப்பு தெரிவித்துள்ளது.  இதில் ஈக்விட்டி  மற்றும் மணி மார்க்கெட் திட்டங்களில் வாடிக்கையாளர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. ஆனால் கடந்த நிதியாண்டு முதல் இரண்டு மாதங்களில் இருந்த 1.46 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிடும் போது தற்போதைய முதலீடு குறைவுதான் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
 
ஈக்விட்டி சார்ந்த மியூச்சுல் ஃபண்ட் திட்டங்களில்  முதலீடு செய்யவதே வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகிறார்கள்.  இதற்கு முக்கிய காரணம் சந்தையின் மீது அதிக நம்பிக்கை ஏற்றபட்டிருப்பதுதான். சில நேரங்களில் சந்தை இறக்கம் அடையும் போது, சந்தையிலிருந்து வெளியேறிய முதலீட்டாளர்கள் கூட அதிக வருமானத்துடன் வெளியேறி உள்ளார்கள். 
 
தற்போதைய நிலையில் லிக்விட் மற்றும் மணி மார்க்கெட் திட்டங்களின் முதலீடு ரூ.86,000 கோடியாகவும், ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் முதலீடு ரூ. 20,256 கோடியாகவும் உள்ளது. இந்தியாவில் மொத்தம் உள்ள 44 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்  நிர்வகித்து வரும் சராசரி சொத்து மதிப்பு ரூ.12 லட்சம் கோடியாக காணப்படுகிறது. 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ