Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மொபைல் சார்ந்த பொருட்களின் விற்பனை ரூ.6,397 கோடி!

இன்றைய நிலையில் ஸ்மார்ட்போன் பிரியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரிடம் சாதாரண மொபைகளே ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்தன. ஸ்மார்ட்போன்கள் அதிகரித்துள்ள இன்றைய நிலையிலும் இதே எண்ணிக்கையில்தான் ஸ்மார்ட்போன்களை பெரும்பாலானவர்கள் வைத்திருக்கிறார்கள். அனைவரும் வாங்கும் விதமாக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதே இதற்கு மிக முக்கிய காரணம்.

போன்களின் எண்ணிக்கை ஒன்றுக்கு மேற்பட்டு இருப்பது போல, போன்கள் சார்ந்த மொபைல் கவர், ஸ்கீரின் ப்ரொடெக்டர், மெமரி கார்டு, பவர் பேங்க், ஹெட்செட் மற்றும் சார்ஜர் போன்ற பொருட்கள் வைத்திருப்பு எண்ணிக்கையும் அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் கடந்த 2014-ம் ஆண்டில் மொபைல் சார்ந்த பொருட்கள் இந்தியாவில் மட்டும் ஒரு பில்லியன் டாலர் (சுமார் ரூ.6,397 கோடி) என்கிற அளவில் விற்பனையாகியுள்ளன. சில நூறு ரூபாய்களில் இந்த பொருட்கள் கிடைப்பதே இந்த பொருட்களின் விற்பனை அதிகரிப்புக்கு காரணமாகும். இந்த விற்பனை நடப்பு ஆண்டில் 25 சதவிகிதம் அதிகரிக்கும் என்பது வட்டாரத் தகவல்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP