Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்பைஸ்ஜெட், ஐஆர்சிடிசி ஒப்பந்தம்: இனி எல்லோரும் விமானத்தில் பறக்கலாம்..!

இன்றைய நிலையில் விமானத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே இருக்கிறது. விமான டிக்கெட் கட்டணங்கள் அதிகமா இருப்பதே இதற்கு மிக முக்கிய காரணமாகும். இதனாலேயே நம்மில் பெரும்பாலான மக்கள் ரயில்களில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்து காத்துக் கொண்டிருப்போம். குறித்த தேதிக்கு டிக்கெட் கிடைக்காமல் போனாலும் காத்திருந்து பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருப்போம். இனி அந்த சிரமம் நமக்கு இருக்காது.

ஏனெனில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனுடன் (ஐஆர்சிடிசி), ரயிலுக்கு டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு காத்திருப்போருக்கு குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட்களை வழங்குவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. "கட்டுபடியாகும் கட்டணங்களே வசூலிக்கப்படும் என்றும், ஆளில்லா விமானங்கள் பறப்பதால் விமான நிறுவனங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக இந்த சேவையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது" என்றும் அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ