Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆப்பிளின் புதிய இயங்குதளம் ஐஓஎஸ் 9

 முன்பெல்லாம் யாராவது ஒரு சிலரிடம் மட்டுமே செல்போன் இருக்கும் . இன்றைக்கு செல்போன் இல்லாதவர்களை பார்ப்பதே அரிதானது. பேசுவதற்கு மட்டுமில்லாமல் அலுவலக வேலைகளிலிருந்து பல பயன்பாடுகளுக்கு செல்போன் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

செல்போன் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து ஸ்மார்ட் போனாக மாறியதில், ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு முக்கியமானது. ஆப்பிள் அறிமுகப்படுத்திய ஐபோன் செல்போன் வரலாற்றில் ஒரு மாபெரும் புரட்சி என்றே சொல்லலாம். ஆப்பிளை தொடர்ந்து பல நிறுவனங்களும் புதிய புதிய வடிவில் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்தது . இந்த ஐபோனை வாங்குவதற்காக மக்கள் தூங்காமல் விடிய விடிய காத்திருந்து வாங்கிச் சென்றனர் என்பது நாம் அறிந்ததுதான். 
ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர்வதற்கும், தக்க வைத்துக்கொள்வதற்கும் புதிய புதிய சேவைகளை அறிமுகப் படுத்திக் கொண்டே இருக்கிறது.சமீபத்தில் ஆப்பிள் வாட்சை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது 
 
ஐபோனை பயன்படுத்தும் பெரும்பாலான வாடிக்கையாளர்களின் முக்கியமான குறையாக இருப்பது பேட்டரி. இந்த பேட்டரி அதிக நேரம் வருவதில்லையே என்கிற குறை பலருக்கும் இருந்தது. இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் விதமாக ஆப்பிள் நிறுவனம் புதியதாக ஐஒஎஸ் 9 இயங்குதளத்தை வடிவமைத்து இருக்கிறது . 

குறைந்த அளவு மின்சாரத்தில் அதிக நேரம் இயங்கக்கூடிய வகையில் இந்த இயங்குதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயங்குதளத்தை பயன்படுத்துவதன் மூலம் பேட்டரி சுமார் நான்கு மணி நேரம் வரை கூடுதலாக இயங்கும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது 
வருகின்ற செபடம்பரில் இருந்து இந்த இயங்குதளத்தை ஆப்பிள் பயன்பாட்டாளர்கள் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம்!
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ