Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மே மாதத்தில் பயணிகள் கார் விற்பனை உயர்வு

 பயணிகள்  கார் விற்பனை, 2015 ம் ஆண்டின் மே மாதத்தில் அதிகரித்து இருக்கிறது. மே மாதத்தில் 7.73 % அதிகரித்து 1,60,067 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன . முந்தைய ஆண்டில் இதே மாதத்தில் 1,48,577 கார்கள் விற்பனையாகி இருந்தது.


2015 ம் ஆண்டில் மே மாதத்தில் மோட்டார் சைக்களின் விற்பனை 3.04% குறைந்து 9,53,322 ஆக உள்ளது. முந்தைய ஆண்டின் மே மாதத்தில் 9,83,210 மோட்டார் சைக்கிள்கள் விற்பனையாகி இருந்தது. இந்தத் தகவலை  இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது. 

 
மே மாதத்தில் ஒட்டு மொத்த இரு சக்கர வாகனங்களின் விற்பனை 1.25% குறைந்து 13,80,950 ஆக உள்ளது

வர்த்தக வாகனங்களின் விற்பனை மே மாதத்தில் 3.95% உயர்ந்து 48,841 ஆக உள்ளது 

2014 ம் ஆண்டு மே மாதத்தில் விற்பனையாகிய அனைத்து வகையான வாகனங்களின் எண்ணிக்கை 16,93,740  ஆக இருந்தது. இது 2015 ம் ஆண்டு மே மாதத்தில் 0.58 % குறைந்து 16,83,962 ஆக உள்ளது
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close