Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேலையிழப்பு எனும் அபாய மணி... சமாளிப்பதற்கான 10 வழிகள்!

வரும் காலங்களில் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தாலும், பொருளாதார மந்த நிலையின் காரணமாக சமீபகாலமாக வேலையிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் டிசிஎஸ் நிறுவனம் தனது பணியாளர்களில் பெரும்பாலானவர்களை ஒட்டு மொத்தமாக வெளியேற்றியது. திரென்று ஏற்பட்ட வேலை இழப்பால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள், பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

 

ஹெச்எஸ்பிசி: 50,000 பேர் வேலை இழக்கும் அபாயம்!
டிசிஎஸ் ஊழியர்களுக்கு ஏற்பட்ட அதே நிலை, இன்று ஹெச்எஸ்பிசி ( Hongkong and Shanghai Banking Corporation) வங்கி ஊழியர்களுக்கு ஏற்பட இருக்கிறது. ஆம், ஹெச்எஸ்பிசி நிறுவனம் தனது பணியாளர்களில் 50,000 பேரை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்திருக்கிறது. மேலும் இன்வெஸ்ட்மென்ட் வங்கிப் பிரிவை மூட இருப்பதாகவும், இந்த வங்கியின் தலைமை செயல் அதிகாரி ஸ்டுவர்ட் கலிவர் தெரிவித்திருக்கிறார். இவர் இந்த வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக 2011-ல் பொறுப்பேற்ற பிறகு செய்யும் இரண்டாவது அதிரடி மாற்றம் இது என வங்கி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.


ஹெச் எஸ்பிசி வங்கியில் 2010-ம் ஆண்டு நிலவரப்படி 2.95 லட்சம் பேர் முழுநேர பணியாளர்களாக இருந்தார்கள். 2014-ல் வங்கிக்கு ஏற்பட்ட பொருளாதார பிரச்னையினால் இந்த எண்ணிக்கையை 2.58 லட்சமாக குறைந்தது. தற்போது வெளியிட்டிருக்கும் 50,000 பணி இழப்பு நடைமுறைக்குப் பிறகு வங்கியின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 2.08 லட்சமாக இருக்கும். வேலை இழப்பு என்கிற அபாய மணியை ஹெச்எஸ்பிசி அடித்திருப்பதால், ஐந்தில் ஒருவர் வேலை இழக்கும் நிலை உண்டாகி இருக்கிறது. இதனால் வங்கி  பணியாளர்கள் அனைவரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.


பிரேசில் மற்றும் துருக்கியில் உள்ள கிளைகளை முழுமையாக மூடுவதற்கான அதிகாரப் பூர்வமான தகவலை வெளியிட்டிருப்பதால், இங்கு வேலை செப்வர்கள் அனைவரும் வேலை இழக்கும் அபயாத்தில் இருக்கிறார்கள். தற்போது அறிவித்திருக்கும் வேலை இழப்பானது படிப்படியாக 2017-ம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் எனவும், வளர்ந்துவரும் வியாபார பிரிவில் ஆட்களை எடுக்க திட்டமிருப்பதாக ஹெச்எஸ்பிசி தெரிவித்திருக்கிறது. இந்த வங்கி உலகம் முழுவதுமுள்ள 80 நாடுகளில் 7,500 கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது. இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி, கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் தனது கிளைகளை கொண்டிருக்கிறது.

மேகி: 500 பேர் தற்காலிக பணி நீக்கம்!
தற்போதைய சர்சையில் சிக்கி, பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டிருக்கும் மேகி நூடுல்ஸ் தயாரிப்பு பிரிவில் வேலை செய்துவந்த 500 கான்ட்ராக்ட் ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்ய, நெஸ்ட்லே நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.


டிசிஎஸ், ஹெச் எஸ்பிசி, நெஸ்ட்லே போன்ற நிறுவன ஊழியர்கள் திடீர் வேலை இழப்பை சந்திதால், அவர்களின் வாழ்க்கை பொருளாதரம் நிச்சயமாக பாதிக்கப்படும். திடீர் வேலை இழப்பு... சமாளிப்பதற்கான 10 வழிகளை தெரிந்து கொள்ள  இங்கே கிளிக் செய்க... http://nanayam.vikatan.com/index.php?aid=10019

- செ.கார்த்திகேயன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ