Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிரிஸில்: ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால்... சரக்கு போக்குவரத்து செலவுகள் குறையும்!

தரச்சான்று நிறுவனமான கிரிஸில், "பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (GST) அமல்படுத்தப்பட்டால், சரக்கு போக்குவரத்துக்கான செலவுகள் குறையும்" என்று தனது சமீபத்திய ஆறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இந்த அமலாக்கத்தின் மூலம் சரக்கு போக்குவரத்துக்கான செலவுகளில் 30% வரை குறையும் எனவும், மூன்று முதல் நான்கு வருடங்களில் சரக்குகளை சேமித்து வைக்கும் கிடங்குகளுக்கான செலவுகளும் குறையும் என்றும் அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் மாநிலங்களுக்கு இடையேயான சோதனைச் சாவடிகள் நீக்கப்படும் என்பதால் பொருட்கள் குறைந்த செலவில் விரைவாக சென்றடையும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. முக்கியமாக இதன் மூலம் நுகர்வோர் பொருட்கள் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். .

எப்எம்சிஜி மற்றும் மருந்து பொருட்கள் துறை 15-20% வரை பயனடையும். இந்த துறையில் இயல்பாகவே இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்பதால் இவற்றுக்கான போக்குவரத்து செலவுகள் குறையும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஆண்டில் ஜிஎஸ்டி அமலுக்கு வரும் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் கிரிஸில் அறிக்கை வெளியாகி இருப்பது கவனிக்கத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP