Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நடப்பு பருவத்தில் பருத்தி உற்பத்தி 3.83 கோடி பொதிகள்!

இந்திய பருத்திச் சங்கம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையில், நடப்பு பருவத்தில் (அக்டோபர்- செப்டம்பர்) பருத்தி உற்பத்தி 3.83 கோடி பொதிகளாக (ஒரு பொதி என்பது 170 கிலோ) இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த பருவத்தில் 4.07 கோடி பொதிகளாக இருந்தது. குஜராத், மஹாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நடப்பு பருவத்தில் பருத்தி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நடப்பு பருவத்தில் மொத்த பருத்தி உற்பத்தி 4.53 கோடி பொதிகளாக இருக்கும் என்றும் (நடப்பு பருவத்தின் உற்பத்தியுடன், இருப்பு இருக்கும் பருத்தியும் சேர்த்து), ஆனால் அதன் உள்நாட்டு தேவை 3.10 கோடி பொதிகளாக இருக்கும் என்றும் இந்திய பருத்தி சங்கம் தெரிவித்துள்ளது. மீதமிருக்கும் 1.43 கோடி பொதிகளை சர்வதேச சந்தைகளில் (ஏற்றுமதி) விற்றே ஆக வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ