Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செபி அனுமதி: புதிய பங்கு வெளியீடு 17-ஆக உயர்வு!

நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்களைகள் மற்றும் நடைமுறை மூலதன செலவினங்களுக்காக புதிய பங்கு வெளியீடு, உரிமை பங்கு வெளியீடு, முன்னுரிமை பங்கு வெளியீடு என பல வழிகளில் நிதியை திரட்டுகின்றன. அந்த அடிப்படையில் நடப்பு ஆண்டில் இதுவரை செபி அமைப்பின் அனுமதி பெற்றுள்ள புதிய பங்கு வெளியீடுகளின் மொத்த எண்ணிக்கை 17-ஆக அதிகரித்துள்ளது.

அமர் உஜாலா பப்ளிகேஷன் (Amar ujala publications), திலிப் பில்டுகான் லாஜிஸ்டிக்ஸ் (Dilip Buildcon), ஸ்ரீசுபம் லாஜிஸ்டிக்ஸ் (Shree shubham logistics) என்கிற மூன்று நிறுவனமும் இறுதியாக செபி அமைப்பிடம் புதிய பங்கு வெளியிடுவதற்காக அனுமதி பெற்றிருக்கிறது. இந்த மூன்று நிறுவனங்களும் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டுவதாக சொல்லியிருக்கும் ரூபாய் மதிப்பு முறையே 50 கோடி, 650 கோடி, 210 கோடி ஆகும்.

இந்த மூன்று நிறுவனங்களில் அமர் உஜாலா 26.90 லட்சம் ரூபாய் வரை  பங்குகளை விற்கவும், திலிப் பில்டுகான் 1.49 கோடி ரூபாய் வரை பங்குகளை விற்கவும் மற்றும் ஸ்ரீசுபம் 70.07 லட்சம் ரூபாய் வரை பங்குகளை விற்கவும் செபியிடம் அனுமதி கேட்டிருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ