Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சந்தை பங்களிப்பை 2 மடங்கு உயர்த்த டெல் திட்டம்!

 

டெக்னாலாஜி சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் டெல் நிறுவனம் அடுத்த ஆண்டுக்குள் தனது சந்தை பங்களிப்பை இரண்டு மடங்கு அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதாவது ஆல் இன் ஒன்  கம்பியூட்டர்  என்ற பிரிவில் தற்போது 15சதவிகிதம் சந்தை பங்களிப்பை டெல் நிறுவனம் வைத்துள்ளது.  ஆல் இன் ஒன் என்பது ஒருகிணைந்த கணிணி ஆகும். இதில் தனிநபர் பயன்படுத்தும் கணிணிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒரு யூனிட்டாக வழங்கப்படும். இந்த கணிணி டெல் நிறுவனம் ரூ.36,990க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இது போன்ற ஒருகிணைந்த மாடலில் டெல் நிறுவனம் 4 மாடல் கணிணி  வைத்துள்ளது. இதன் அடிப்படையில் அடுத்த ஒரு வருடத்தில் சந்தை பங்களிப்பை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது.

 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ