Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்கா முதலிடம்

 உலக அளவில் 2014 ம் ஆண்டில் அதிகமாக எண்ணெய் மற்றும் எரி வாயு உற்பத்தி செய்யும் நாடுகளில் சவூதி அரேபியாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.

அமெரிக்கா 2014 ம் ஆண்டு 15.9 சதவிகிதம் அதிகமாக எண்ணெய்யை உற்பத்தி செய்திருக்கிறது. அமெரிக்கா 2014 ம் ஆண்டில் தினந்தோறும் 11.6 மில்லியன் பேரல் எண்ணெய்யை உற்பத்தி செய்தது. சவூதி அரேபியா தினந்தோறும் 11.5 மில்லியன் பேரல் எண்ணெய்யை உற்பத்தி செய்தது 
ரஷ்யா தினந்தோறும் 10.8 மில்லியன் பேரல் எண்ணெய்யை உற்பத்தி செய்து மூன்றாம் இடத்தை வகிக்கிறது 

உலக அளவில் பெரிய பொருளாதார நாடுகளில் எரிசக்தியை நுகர்வதில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP