Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தக்கலில் ரயில் டிக்கெட்: ரத்தானால் பாதி பணம் திரும்ப கிடைக்கும்!

திடீர் ரயில் பயணங்களை மேற்கொள்பவர்களுக்காக, தக்கல் முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு முறை நடைமுறையில் இருந்துவந்தது. நாளை பயணிக்க நினைப்பவர்கள், இன்று ஐஆர்சிடிசி வலைதளத்துக்கு சென்று காலை 10 முதல் 11 மணிக்குள்ளாக டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த முறையில் டிக்கெட் முன்பதிவு செய்து ரத்தானால், திரும்ப பணம் கிடைக்காது. ஆனால் இனி அப்படியில்லாமல் இந்திய ரயில்வேதுறை  டிக்கெட் முன்பதிவு நேரத்தை இரு பிரிவாக மாற்றி அமைத்துள்ளது. மேலும் இந்த வசதியை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் டிக்கெட் ரத்தானால் பாதி பணம் திரும்ப கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளது. அதாவது குளிர்சாத பெட்டிகளுக்கான தக்கல் முன்பதிவு  காலை 10-11 மணி வரையும், மற்ற வகுப்புகளுக்கான முன்பதிவு 11-12 மணி வரையிலும் அனுமதிக்கப்படும் எனவும், இந்த வசதி விரைவில் நடைமுறைக்கு  வரும் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ