Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெளிநாட்டுவிளம்பரங்களினால் ஃபேஸ்புக்கின் விளம்பர வருமானம் 51% அதிகரிப்பு!

ஃபேஸ்புக்  அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இதை கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளும் சமூக வலைதளமாக  பலரும் பயன்படுத்துகிறார்கள். இந்த இணையதளத்தில் வெளியிடப்படும் விளம்பரங்களின் மூலமாக ஃபேஸ்புக் நிறுவனம் வருமானம் ஈட்டி வருகிறது. இந்த வருமானம் வெளிநாட்டு விளம்பரங்களின் மூலமாக 51 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு 1.7 பில்லியன் டாலர் ஆகும். வேகமான வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளில் ஆசிய நாடுகள் முக்கிய இடத்தில் உள்ளது. மேலும் ஃபேஸ்புக் முதல்முறையாக அமெரிக்க மற்றும் கனடா தவிர்த்து பிறகு நாடுகளின் வருமான விவரத்தை வெளியிட்டுள்ளது. 

இந்த காலாண்டில் ஃபேஸ்புக்கின் நிறுவனத்தின் மொத்த விளம்பர வருமானம் 46 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு 3.3 பில்லியன் டாலர் ஆகும். 
செல்போனில்  விளம்பரம் செய்யும் போது கிடைக்கும் வரவேற்பைவிட, ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்யும் போது 70 சதவிகிதம் அதிகமாக வரவேற்பு கிடைக்கிறது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ