Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கார்விற்பனை அதிகரிப்பு; இரு சக்கர வாகன விற்பனை குறைவு!

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (எஸ்ஐஏஎம்) வெளியிட்ட அறிக்கையின் மூலம், "கார் விற்பனை தொடர்ந்து 7-வது மாதமாக மே மாதத்தில் 7.7% அதிகரித்துள்ளது. அதேசமயம் இரு சக்கர வாகன விற்பனை மே மாதத்தில் மூன்று சதவிகிதம் குறைந்திருப்பது"  தெரியவந்துள்ளது. மே மாதத்தில் மொத்தம் விற்பனையான கார்களின் எண்ணிக்கை 1.60 லட்சம். முந்தைய ஆண்டு இதே காலத்தில் 1.48 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளது. கார் விற்பனை அதிகரித்துள்ளது நல்ல அறிகுறியாகத் தெரிகிறது. அதேசமயம் மோட்டார் சைக்கிள் மற்றும் இலகு ரக வர்த்தக வாகனங்களின் விற்பனை சரிந்துள்ளது கிராமப்புற பொருளாதாரத்தில் மீட்சி ஏற்படவில்லை என்பதையே காட்டுவதாக எஸ்ஐஏஎம் இயக்குநர் ஜெனரல் விஷ்ணு மாத்துர் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதத்தில் மொத்தம் 9.53 லட்சம் இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய ஆண்டு இதே காலத்தில் மொத்தம் விற்பனையான வாகனங்களின் எண்ணிக்கை 9.83 லட்சம் ஆகும். இதே காலகட்டத்தில் இலகு ரக வர்த்தக வாகனங்களின் விற்பனையும் 7.19% சரிந்துள்ளது. மொத்தம் 28,266 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் மொத்தம் 30,414 வாகனங்கள் விற்பனையானது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP