Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாப் 50 சிஇஓ-க்கள்: கிளாஸ்டோர் வலைதளம் வெளியீடு!

பிரபல தொழில் வலைதளங்களில் ஒன்றான கிளாஸ்டோர் (glassdoor.com) ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க பணியாளர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி, டாப் 50 சிஇஓ பட்டியலை அந்தந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டு வருகிறது. நடப்பு ஆண்டின் டாப் 50 சிஇஓ தரவரிசை பட்டியலை கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டது. இதில் இந்தியாவின் சிடிஎஸ் நிறுவனத்தின் ஃப்ராங்க் டி செளஸா (33-வது இடம்), இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் விஷால் ஷிக்கா (35-வது இடம்) மற்றும் அடோப் நிறுவனத்தின் சனந்தனு நாராயன் (47-வது இடம்) ஆகிய மூன்று சிஇஓ-க்கள் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இந்த பட்டியலின் முதல் இடத்தில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ லேரி பேஜ் இடம்பிடித்திருக்கிறார். ஃபேஸ்புக் நிறுவனத்தின் மார்க் ஜூகர்பர்க் நான்காவது இடத்தையும், ஆப்பிள் நிறுவனத்தின் டிம் ஹூக் பத்தாவது இடத்தையும் பெற்றிருக்கிறார்கள். நடப்பு ஆண்டின் இந்த தரவரிசைப் பட்டியலில் பெண் சிஇஓ-க்கள் ஒருவர் கூட இடம் பெறாதது வருந்தத்தக்க விஷயம் என கிளாஸ்டோர் தெரிவித்துள்ளது. சிஇஓ-க்களின் பணியாளர்களை ஊக்குவிக்கும் தன்மை, அவர்களின் தலைமை பண்பு போன்ற குணநலன்களை அடிப்படையாக வைத்து அமெரிக்க பணியாளர்களில் 1,000 பேரிடம் இந்த வலைதளம் கருத்துக் கணிப்பை நடத்தியிருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ