Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிக சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்: டோனி நம்பர் 23!

பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை நடப்பு ஆண்டில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களின் 100 பேர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இதில் இந்திய கிரிக்கெட் டீம் கேப்டன் மகேந்திர சிங் டோனி 23-வது இடத்தை பெற்றிருக்கிறார். சம்பளம் மற்றும் பரிசுத் தொகை, ஊக்கத் தொகை, விளமம்பரம் மூலம் கிடைக்கும் சம்பளம் என டோனி பெற்றிருக்கும் மொத்த வருமானம் 3.1 கோடி டாலர் (ரூ.198.40 கோடி). இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரே இந்திய வீரர் என்கிற பெருமை டோனிக்கு கிடைத்துள்ளது. அதே சமயம் சென்ற ஆண்டின் இதே பட்டியலில் 22-வது இடத்தில் இருந்த டோனி, தற்போதைய பட்டியலில் 23-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களின் தர வரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர் பிளாய்டு மேவெதர் 30 கோடி டாலருடன் முதல் இடத்தில் இருக்கிறார். இவரைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்கள் முறையே பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த குத்து சண்டை வீரர் மேனி பாகியோ (16 கோடி டாலர்) மற்றும் கிறிஸ்டினா ரொனால்டோ (7.96 கோடி டாலர்) இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த பட்டியலில் மரியா ஷரபோவா (26-வது இடம்) மற்றும் ஷெரினா வில்லியம்ஸ் (47-வது இடம்) ஆகிய இரண்டு பெண் விளையாட்டு வீரர்கள் மட்டும் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்களின் சம்பளம் முறையே 2.97 கோடி டாலர் மற்றும் 2.46 கோடி டாலர் ஆகும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ