Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இஎம்ஐ கவனிக்க வேண்டி 5 விஷயங்கள்!

1. கடன்,  அதற்கான வட்டி எவ்வளவு என்பதை கணக்கீட்டு  நீங்கள் செலுத்தும் இஎம்ஐ (Equated Monthly Installments) சரியான தொகையா என்பதைப் பார்க்க வேண்டும்.  ஏனெனில் நிதி நிறுவனங்கள் கடனுக்கான வட்டி குறைத்து கூறி,  இஎம்ஐ-ஐ அதிகமாக வைத்திருக்க வாய்ப்பு இருக்கிறது. 


2. இஎம்ஐ தேதியை தேர்வு செய்யும் போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம். அதாவது உங்களின் சம்பள தேதியிலிருந்து ஒருவாரத்துக்கு பிறகு இஎம்ஐ தேதி இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. சில நேரங்களில் சம்பளம் தாமதமாகும் போது சிக்கல் இருக்காது.

3. மாதச் சம்பளம் வாங்குபவராக இருந்தால் உங்களின் அனைத்து கடன் மற்றும் முதலீடுகளுக்கு  ஒரே தேதியில், குறிப்பாக  7 முதல் 10ம் தேதிக்குள் இஎம்ஐ இருக்குமாறு பார்த்துக் கொள்வது முக்கியம். ஏனெனில் மாதத்தில் 15 மற்றும் 20 ம் தேதியை இஎம்ஐக்காக கொடுத்திருப்போம். ஆனால்  அவசர தேவைக்கு இஎம்ஐ- ஐ மறந்து பணத்தை எடுத்துவிடும்.  எனவே ஒரே தேதியில் இஎம்ஐ இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.
 


4. இஎம்ஐ தொகை, உங்களால் எளிதில் செலுத்த கூடிய தொகையா என்பதைப் பார்க்க வேண்டும். அதாவது உங்களின் நிரந்தர வருமானத்திலிருந்து இஎம்ஐ கட்டுவது போல் பார்த்துக் கொள்வது நல்லது. சிலருக்கு இதர வருமானம் வரும். அதில் இஎம்ஐயை செலுத்தி விடலாம் என நினைப்பார்கள். இது முற்றிலும் தவறானது. இதர வருமானம் எப்போது வேண்டுமானாலும் தடைப்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதனை கூடுதலாக கடன் கட்ட பயன்படுத்திக் கொள்ளலாம்.

5. கூடிய வரையில்  1 அல்லது 2 மாத இஎம்ஐ தொகையை எப்போதும் வங்கியில் இருப்பு வைத்துக் கொள்வது நல்லது.

- இரா.ரூபாவதி
 


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP