Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கார் கடன் வாங்கும் போது கவனிக்க 5 விஷயங்கள்.

 கார் கடன் வாங்கும் போது கவனிக்க 5 விஷயங்கள்.

கார் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். இதில் பெரும்பாலானவர்கள்  கார் கடன் மூலமாகவே கார் வாங்குகிறார்கள். இந்த கடன் வாங்குவதற்கு முன் எந்தெந்த விஷயங்கள் கவனிக்க வேண்டும் என்பது குறித்த்து பார்ப்போம். 

ஒப்பீடு அவசியம்.


கார் கடனுக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன், வங்கிகளில் எந்த விதமான ஆஃபர்கள் உள்ளன என்பதை ஒப்பீட்டு பார்க்க வேண்டும். அதில் பெஸ்ட் ஆஃபரை தேர்வு செய்வது நல்லது. அதன் பிறகு ஆன்லைன் மூலமாக அல்லது நேரடியாக கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம்.


கடன் தகுதி!
வங்கிகள் கடன் வழங்கும் தொகை வங்கிக்கு வங்கி வித்தியாசப்படும். மேலும் சில வங்கிகள் காரின் மதிப்பின் தொகையில் 90 சதவிகிதம் வரை கடன் வழங்குகின்றன. காரின் விலை, மாடல், மறுவிற்பனை மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கடன் தொகை நிர்ணாயிக்கப்படும். 
இதனுடன் கடனுக்கான செயல்பாட்டு கட்டணம், தாமதம் ஆகியவற்றையும் கடன் வாங்குவதற்கு முன் ஒப்பீட்டு பார்ப்பது அவசியம்.

ஆவணங்கள்!


கடன் வாங்குவதற்கு தேவையான ஆவணங்களை முன் கூட்டியே தயார் படுத்தி வைத்துக் கொள்வது அவசியம். அதாவது முகவரி சான்று, புகைப்பட அடையாள சான்று , வருமானத்துக்கான ஆதாரம், உங்களின் புகைப்படம் ஆகியவற்றை சரியாக கொடுத்தால் ஒரு வாரத்தில் கார் கடனுக்கான ஒப்புதல் கிடைத்துவிடும்.

வட்டி விகிதம்!
கடன் வாங்கும் போது வட்டிவிகிதத்தை கட்டாயம் கவனிக்க வேண்டும். வங்கியின் வாடிக்கையாளர் எனில் வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது. அதாவது அந்த வங்கியில் ஏற்கனவே கடன் வாங்கி அதை சரியாக திரும்ப செலுத்தி இருந்தால் இந்த வட்டி விகித குறைப்பு இருக்கலாம். 
மேலும் ஒவ்வொரு வங்கிக்கும் வட்டி விகிதம் வித்தியாசப்படும். இதை கவனித்து குறைவான வட்டி விகித்தை தேர்வு செய்வது நல்லது.

கடனை திரும்ப செலுத்தும் காலம்!


கடன் வாங்கும் போதே, அதை எத்தனை ஆண்டுகளில் திரும்ப செலுத்த போகிறீர்கள் என்பதை முடிவு செய்துவிடுவது நல்லது. ஏனெனில் உங்களால் குறுகிய காலத்தில் கடன் திரும்ப செலுத்த முடியும் எனில் அதிக இஎம்ஐ தொகை தேர்வு செய்வது நல்லது. அதிக  தொகையை  செலுத்த முடியவில்லையெனில் நீங்கள் கடனை திரும்ப செலுத்தும் கால அளவை அதிகரித்துக் கொள்ளலாம். பொதுவாக கடனை திரும்ப செலுத்துவதற்கான காலம் 5 ஆண்டுகளாக இருக்கும். சில வங்கிகள் ஏழு ஆண்டுகள் வரையும் கடனை திரும்ப செலுத்த அனுமதிக்கிறது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ