Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நகரம்: சென்னை 4-ம் இடம்!

வட இந்தியர்கள் தென் இந்தியர்களை விட மிகவும் மகிழ்சியாக வாழ்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. எல்ஜி நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட சர்வேயின் மூலம் இந்த விஷயம் தெரியவந்திருக்கிறது. இந்த சர்வே மொத்தம் 16 மாநிலங்களில் வசிக்கும், பொருளாதார அடிப்படையில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 150 மக்களிடம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  இதில் மகிழ்ச்சியாக வாழும் மக்களின் சதவிகிதம் அதிகம் இருக்கும் நகரமாக சண்டிகர் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்கள் முறையே லக்னோ மற்றும் இந்தியாவின் தலைநகரமான புதுடெல்லி இடம் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் தமிழகத்தின் தலைநகரம் சென்னனையும், பெங்கரூளு பாட்னா பூனே ஆகியவை ஐந்து, ஆறு மற்றும் ஏழாவது இடத்திலும் இருக்கின்றன.

இந்த சர்வேயில் தெரிய வந்திருக்கும் மிக முக்கியமான விஷயம், 35-45 வயதுள்ள மக்கள் 18-24 வயதுள்ள மக்களை விட சந்தோஷமாக இருக்கிறார்கள். 35-45 வயதுள்ளவர்களின் மகிழ்ச்சி குறியீடு 103 சதவிகிதமாக இருக்கிறது. 18-24 வயதுள்ளவர்களின் சந்தோஷ குறியீடு 58 சதவிகிதமாகவும் இருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP