Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய ஏற்றுமதி தொடர்ந்து ஆறு மாதமாக சரிவு

 உலகளவில் வாங்கும் திறன் குறைந்திருப்பதால் நம் நாட்டில் ஏற்றுமதி வணிகம் தொடர்ந்து ஆறு மாதமாக சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது 
கடந்த ஆண்டின் மே மாதத்தோடு ஒப்பிடும் போது இந்த ஆண்டின் மே மாதத்தில் ஏற்றுமதி வணிகம் 20.2 சதவிகிதம் குறைந்திருக்கிறது . 


மே மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 10.41 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.கடந்த மூன்று மாதத்தில் இது மிகவும் குறைவானதாகும் .வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஏப்ரல் மாதத்தில் 10.99 பில்லியன் டாலராக இருந்தது. 

மே மாதத்தில் 32.75 பில்லியன் டாலருக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதியின் அளவு 22.35 பில்லியன் டாலராக உள்ளது

கச்சா எண்ணெய்யின் இறக்குமதி அதிகரித்து இருக்கிறது. மே மாதத்தில் கச்சா எண்ணெய் 8.54 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் 7.44 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close