Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மொத்த விலை குறீயிடு ஏழாவது மாதமாக தொடர்ந்து சரிவு

 பணவீக்கத்தை அடிப்படையாக கொண்ட மொத்த விலை குறீயிடு  ஏழாவது மாதமாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. மே மாதத்தில் சரிவிலிருந்து கொஞ்சம் முன்னேறி - 2.36 சதவிகிதமாக உள்ளது.கடந்த ஏப்ரல் மாதத்தில் - 2.65 சதவிகிதமாக இருந்தது .


கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது பருப்பு வகைகளின் மொத்த விலை இந்த ஆண்டு மே மாதத்தில் 22.84 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 15.38 சதவிகிதம் உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது

மே மாதத்தில் ஒட்டு மொத்த உணவுப் பணவீக்கம் குறைந்து 3.80 சதவிகிதமாக உள்ளது. கடந்த மாதத்தில் 5.73 சதவிகிதமாக இருந்தது. உணவுப் பணவீக்கம் நான்காவது மாதமாக தொடர்ந்து குறைந்து வந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
 
ஜுலை 1975 ல் இருந்து ஜூன் 1976 வரைக்கும் தொடர்ச்சியாக பணவீக்கம் மைனஸில் இருந்தது குறிப்பிடத்தக்கது 
       
பணவீக்கம் தொடர்ந்து மைனஸில் செல்வதால் மக்கள் அன்றாடம் பயன்படுத்துகிற பொருட்களின் விலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ