Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்களின் ஸ்மார்ட்போன் ஹேங் ஆகிறதா... சரி செய்வதற்கான வழிமுறைகள்!

சாதா போன்களைவிட ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை இன்று அனைவரின் கையிலும் ஸ்மாட்ர்ட்போன் வந்துவிட்டது. துவக்கத்தில் நாம் வைத்திருந்த மொபைல் போன்களைப் பயன்படுத்தும்போது இருந்த சுதந்திரம் இப்போது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு இன்றைய ஸ்மார்ட்போன்கள் நாம் பயன்படுத்தும் முறைகளை மாற்றியமைத்துவிட்டன. பயன்பாட்டிற்கு ஏற்ப அவை ஏற்படுத்தும் பிரச்னைகளும் நாளுக்குநாள் அதிகமாகவே இருக்கின்றன. அதில் மிக முக்கியமான பிரச்னை, அடிக்கடி ஹேங் ஆவதுதான். இதனால் அவசர அழைப்புகளைக்கூடப் பேச முடியாத சூழ்நிலை உருவாகிவிடுகிறது. இந்தப் பிரச்னையை எப்படி சரி செய்யலாம் என்பதை இனி பார்க்கலாம்.
 

பிரச்னைகளும்; தீர்வுகளும்!
* இன்றைய நிலையில் அனைத்து வசதிகளையும் ஆப்ஸ்கள் நமக்குச் செய்து கொடுப்பதால், ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் அதிகளவில் ஆப்ஸ்களைப் பதிவிறக்கம் செய்கிறார்கள். அப்படிப் பதிவிறக்கம் செய்யப்படும் ஆப்ஸ்கள் பின்னணியில் இயங்கும் போது மொபைல் ஹேங் ஆகும். அதாவது, நாம் அதை அடிக்கடி பயன்படுத்தவில்லை என்றாலும் இணைய வசதி மூலம் பல செயலிகள் தன்னிச்சையாக ஸ்மார்ட்போன் திரைக்குப் பின்பகுதியில் இயங்கிக் கொண்டிருக்கும். இந்தச் செயல்பாடுகளை அவ்வப்போது க்ளோஸ் செய்துவிட வேண்டும். முடிந்தவரை இதைச் சரிசெய்யத் தரமான செயலிகளைப் பதிவிறக்கம் செய்யலாம்.

* பொதுவாக உங்களது ஸ்மார்ட்போனில் குறைவான ரேம் (RAM) இருந்து அளவுக்கு அதிகமான ஆப்ஸ்களைப் பயன்படுத்தினால், ஸ்மார்ட்போன் ஹேங் ஆகும். இதோடு தேவையற்ற ஆப்ஸ்களைப் பதிவிறக்கம் செய்வதும் ஹேங்கிங் பிரச்னைக்கு முக்கியக் காரணமாகும்.

* ஸ்மார்ட்போன் ஹேங் ஆகும்போது அதனை ஸ்விட்ச் ஆஃப் செய்து பேட்டரியை கழற்றி சிறிது நேரம் கழித்து மீண்டும் ஆன் செய்யலாம். சில சமயங்களில் ஆஃப் செய்ய முடியாது. அதுபோன்ற நேரத்தில் போனின் பேட்டரியை கழற்றிவிடலாம். இன்பில்ட் பேட்டரி என்றால் பேட்டரியை கழட்ட முடியாது. அப்படியே ஸ்விட்ச் ஆஃப் செய்து ஆன் செய்யலாம். ஸ்விட்ச் ஆஃப் செய்ய முடியவில்லை என்றால் மொபைல் ஆபரேட்டர்களை அணுக வேண்டியதுதான். முடிந்தவரை இன்பில்ட் பேட்டரி இல்லாத ஸ்மார்ட்போன்களையே பரிசீலிக்கவும்.

* ஒரு வேளை ஏதேனும் அப்ளிகேஷனைப் பயன்படுத்தும்போது ஸ்மார்ட்போன் ஹேங்கானால், பெரும்பாலும் அந்த ஆப்ஸ்தான் காரணமாக இருக்கும். இதுபோன்ற சமயங்களில், போன் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும்போது, அந்த ஆப்ஸை அன்இன்ஸ்டால் செய்துவிட்டு, பிறகு தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படிச் செய்யும்போது அதே பிரச்னை மீண்டும் வராமல் இருக்கும்.

* சில சமயங்களில் ஸ்மார்ட்போனில் ஃபைல்களைச் சேமிக்க இடம் இல்லாததும் ஹேங் ஆவதற்குக் காரணமாக இருக்க முடியும். இதனால் முடிந்த வரை உங்களது தேவையில்லாத ஃபைல்களை அழித்து போனின் மெமரியை எப்போதும் கொஞ்சம் காலியாக வைத்துக் கொள்ளுங்கள்.

* அடிக்கடி இதுபோன்ற பிரச்னை இருந்தால் போனின் மென்பொருளில் ஏதும் கோளாறு இருக்கலாம். இதனால் மொபைல் போனின் மென்பொருளினை அப்டேட் செய்து பார்க்கவும். 2 - 3 நாட்களுக்கு ஒருமுறை போனினை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஸ்மார்ட்போன் அடிக்கடி ஹேங் ஆவதை தவிர்க்கலாம். மேலும், பிரச்னை இருந்தால் போனினை ரீசெட் செய்து பார்க்கலாம். இவ்வாறு செய்யும் முன் போனில் இருக்கும் தகவல்களை பேக்கப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. ஹேங் ஆனாலும் பரவாயில்லை என்று அப்படியே ஸ்மார்ட்போனை பயன்படுத்தும்போது, ஸ்மார்ட்போன் ரிப்பேராகி அதைப் பயன்படுத்த முடியாத நிலைகூட உருவாகலாம். அதனால் கவனம் முக்கியம்.

 

-செ.கார்த்திகேயன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close