Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நறுமணப் பொருட்களின் ஏற்றுமதி 9% அதிகரிப்பு!

காலம்காலமாக இந்தியாவிலிருந்து மிளகு, மஞ்சள், கொத்துமல்லி, ஏலக்காய், மிளகாய், பொதினா மற்றும் அது சார்ந்த பொருட்கள, கறி மசாலா, மசாலா பேஸ்ட் என பல நறுமணப் பொருட்கள் ஏற்றுமதியாகி வருகின்றன. இதற்கான ஏற்றுமதி தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாக நறுமணப் பொருட்களின் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த 2014-15-ம் ஆண்டில் ஏற்றுமதியாகி இருக்கும் நறுமணப் பொருட்களின் மதிப்பு ரூ.14,900 கோடி. இது இதற்கு முந்தைய ஆண்டில் 13,735 கோடி ரூபாயாக காணப்பட்டது. 2014-15-ம் ஆண்டில் மட்டும் 8.94 லட்சம் டன் நறுமணப் பொருட்கள் ஏற்றுமதியாகி இருக்கின்றன. இதில் மிளகாய் அதிக பங்கு வகிக்கிறது. இந்த காலகட்டத்தில் மட்டும் 3.47 லட்சம் டன் மிளகாய் (ரூ.3,517 கோடி) ஏற்றுமதியாகி இருக்கிறது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டை விட அளவில் 11 சதவிகிதமும், மதிப்பில் 29 சதவிகிதமும் அதிகமாகும்.

அதே போல மிளகு 1,208 கோடி ரூபாய்க்கும் (21,450 டன்), மஞ்சள் 744.35 கோடி ரூபாய்க்கும் (86,000 டன்), கொத்துமல்லி 498 கோடி ரூபாய்க்கும் (46,000 டன்), சிறிய ரக ஏலக்காய் 498 கோடி ரூபாய்க்கும் (3,795 டன்), பெரிய ரக ஏலக்காய் 84 கோடி ரூபாய்க்கும் ஏற்றுமதியாகி இருக்கின்றன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ