Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல்லோருக்கும் பிரியமான சமூக வலைதளம்: ஃபேஸ்புக்!

சமூக வலைதளங்கள்தான் இன்று நம்மை ஆட்டிப்படைக்கின்றன. காலையில் எழுந்தது முதல், இரவு தூங்கச் செல்வது வரை எல்லோரும் சமூக வலைதளங்களுடன் உறவாடிக் கொண்டுதான் இருக்கிறோம்.

தனிநபர் அல்லது ஒரு விஷயம் அல்லது ஒரு பொருள் குறித்த நிறைகள், குறைகள், புகார்கள் என எதுவாக இருந்தாலும் இன்று முதலில் பதியப்படுவது சமூக வலைதளங்களில்தான்.

பொழுதுபோக்குக்காக, அறிவிப்பகிர்வுக்காக, தொழில் முன்னேற்றத்துக்காக என எண்ணற்ற வகையில் இன்று சமூக வலைதளங்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். சில ஆண்டுகளுக்கு முன்பு கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் இருந்தால் மட்டும்தான் சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியும் என்கிற நிலை காணப்பட்டது. 

ஆனால் இன்று அப்படியில்லை, நம் எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் இருப்பதால் நாளுக்கு நாள் சமூக வலைதள பயன்பாடும், அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சமூக வலைதளம் பயன்பாடு: கிராமத்தில் 100% வளர்ச்சி!

மிக முக்கியமாக கிரமப்புறங்களில் இந்த வளர்ச்சியானது அதிகமாக காணப்படுவதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. முன்பெல்லாம், எதுவாக இருந்தாலும் நகரவாசிகள் அனுபவித்து ஆண்ட பிறகுதான் கிராம வாசிகள் அதை அனுபவிக்கவே ஆரம்பிப்பார்கள். ஆனால் இப்போது அப்படியில்லை அனைத்து வசதிகளும் இருசாரருக்கும் ஒன்றாகவே கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக ஸ்மார்ட்போன்கள்.

கிராமங்களில்  ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கையும், அதன் மூலம் சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஒரு வருடத்தில் 100% வளர்ச்சி கண்டிருப்பதாக இந்தியாவின் இணைய மற்றும் கைத்தொலைபேசி சங்கம் (IAMAI) தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு கிராமங்களில் மட்டும் 2.5 கோடி சமூக வலைதள பயனாளர்கள் இருப்பதாக கணித்துள்ளது. இந்த எண்ணிக்கை நகர்புறங்களில் 11.8 கோடியாக இருப்பதாகவும், இது சென்ற ஆண்டை விட 35% அதிகம் என்றும் கணித்துள்ளது. இருப்பினும் கிராமப்புற வளர்ச்சியைக் காட்டிலும் இது குறைவாகும் எனவும் தெரிவித்துள்ளது.


 

கூகுள்பிளஸ் 2-ம் இடம்!
சமூக வலைதளங்களிளேயே ஃபேஸ்புக் வலைதளம்தான் எல்லோருக்கும் பிரிமியமான வலைதளமாக இருக்கிறது. இந்த வலைதளத்தை 96% பயனாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இதற்கு அடுத்து கூகுள் பிளஸ் வலைதளம் இடம்பிடித்துள்ளது. இதை 61% பயனாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

ட்விட்டர் வலைதளத்தை 43% பேர் பயன்படுத்துவதால் இது மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்து பிஸினஸ் சமூக வலைதளமான லிங்டுஇன் 24% பயனாளர்களுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது.

பொதுவாக சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களில் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் 34% பங்கு வகிக்கிறார்கள். இளைஞர்கள் 27% பயன்படுத்துகிறார்கள். வயதான ஆண்கள் 10%, பள்ளிகளுக்குச் செல்லும் பிள்ளைகள் 12% பங்கு வகிக்கிறார்கள்.

வேலைக்குச் செல்லும் பெண்களைவிட (7%) வேலைக்குச் செல்லாத பெண்கள் (11%) சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்கிற விவரம் இந்த ஆய்வறிக்கை மூலம் தெரியவந்திருக்கிறது.

 

- செ.கார்த்திகேயன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP