Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழ்நாடு: பொறியியல் பட்டதாரிகளுக்கு 5% மட்டுமே வேலை!

கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் பாடங்களை படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு மிகவும் குறைந்து காணப்படுகிறது. அதுவும் 2014 ஆண்டு வேலையில்லை என்கிற நிலைமைக்கு தள்ளப்பட்ட பொறியாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக  சென்ற கல்வி ஆண்டில் பொறியியல் பாடப் பிரிவுகளை தேர்வு செய்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்திருந்தது கவனிக்கத்தக்கது. இதனால் பல பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் காணப்பட்டன.

மனிதவள மேம்பாட்டு நிறுவனமான  Strides counsulting சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆய்வறிக்கை ஒன்றில், பொறியியல் பட்டதாரிகளுக்கு தற்போது தமிழ்நாட்டில் 5% வேலை  மட்டும்தான் இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நிலை கடந்த ஐந்து ஆண்டுகளாக காணப்படுவதாகவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ