Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மே, 2015: இண்டிகோ விமானங்களிம் பயணித்தவர்கள் 27.69 லட்சம் பேர்!

ஒவ்வொரு ஆண்டின் மே மாதம் முழுவதும் கோடைக்காலம் அதே சமயம் விடுமுறைக்காலம் என்பதால் மக்களில் பெரும்பாலும் சுற்றுலா செல்வது வழக்கம். இந்த சமயங்களில் பேருந்து, ரயில் மற்றும் விமானம் என கூட்டம் அலைமோதும். பெரும்பாலான நிறுவனங்கள் இந்த காலகட்டத்தில் பயண ஆஃபர்களை வாரி வழங்குவார்கள்.

அந்த வகையில் விமான நிறுவனங்களுள் ஒன்றான இண்டிகோ, கடந்த மே மாதத்தில் மட்டும் மொத்தம் 27.69 லட்சம் பயணிகளுடன் வானில் பயணித்துள்ளது. இதனால் இந்த நிறுவனம் 38.9% உள்நாட்டு சந்தை பங்குடன் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 18.3% சஙந்தை பங்குடன் இரண்டாம் இடத்திலும், மூன்றாவது மற்றும் நான்காவது இடங்கள் முறையே ஏர் இந்தியா (15.8%) மற்றும் ஸ்பைஸ்ஜெட் (11.7%) விமான நிறுவங்களும் இடம் பிடித்திருக்கின்றன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ