Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிவிட்டீர்களா?! இன்னும் எட்டு நாட்களே இருக்கின்றன!

2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சிட்டு வெளியிடப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை பொது புழக்கத்திலிருந்து விலக்கிக் கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி(RBI)  முடிவெடுத்திருந்தது. அதற்கான கால அவகாசத்தை ஜனவரி ஒன்றாம் தேதி என அறிவித்து, பின்னர் அதை ஜூன் 30-ம் தேதி என நீட்டிப்பு செய்தது. இந்த கால அவகாசம் முடிய இன்னும் எட்டு நாட்கள்தான் இருக்கிறது என்பது அனைவரும் கவனிக்க வேண்டிய விஷயமாகும். 2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்டிருக்கும் ரூபாய் நோட்டுகளில் வருடம் அச்சிடப்பட்டிருக்கும் என்பதால் அதை கண்டுபிடிப்பது எளிதான விஷயம்.

ரிசர்வ் வங்கி இந்த தகவலை அறிவித்த நாளிலிருந்து இதுவரை 21,750 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு வந்திருக்கின்றன எனவும், இந்த நடைமுறையால் கள்ள நோட்டுகள் புழக்கத்தை தடுக்க முடியும் எனவும் ரிசர்வ் வங்கி வட்டாரம் தெரிவித்துள்ளது..

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ