Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எடை குறைவு பிரச்னையில் டெட்டால் சோப்!

சில நாட்களுக்கு முன் மேகி நூடுல்ஸில் வேதிப்பொருட்கள் கலந்திருக்கிறது என்று அதன் விற்பனை இந்தியாவின் பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது டெட்டால் குளியல் சோப் பிரச்னையில் மாட்டியுள்ளது. ரெக்கிட் பென்கிசர் நிறுவன தயாரிப்பான டெட்டால் குளியல் சோப்பின் தரம், அதன் எடை மற்றும் வெவ்வேறு பிராண்டை சேர்ந்த பத்து மருந்துவ குணமுள்ள சோப்புகள் தரத்தை சமீபத்தில் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆய்வு செய்தது . அதன் மூலம்  டெட்டால் சோப்பின் தரம் சரியில்லை என்றும் அதன் எடை குறைவாக உள்ளது என்றும் ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது

டெட்டால் சோப்பின் கவரில் சோப்பின் எடை 125 கிராம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .ஆனால் அதன் எடை 117.0470 கிராம் மட்டுமே உள்ளது என்று உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
100 சதவிகிதம் ஆரோக்யமான குளியல் சோப் என்று விளம்பரப் படுத்தப் பட்டு வந்த டெட்டால் சோப்பே இப்போது பிரச்னையில் சிக்கியுள்ளதால் மக்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ