Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எல்ஜி செல்போன் விற்பனை சந்தை பங்களிப்பு 10% உயர்த்த திட்டம்

 தென் கொரிய நிறுவனமான எல்ஜி  ஜி4 செல்போனை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக இந்தியாவில்  செல்போன் தயாரிப்பு பிரிவில் 10 சதவிகித சந்தை பங்களிப்பு வருகிற டிசம்பர் மாதத்துக்குள் பெற திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக 2015ம் வருடத்தில் ரூ. 1000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. 

மேலும் ஜி4 செல்போன்தான் இந்தியாவின் மிக சிறந்த ஸ்மார்ட் போனாக இருக்க வேண்டும். அதேபோல எல்ஜி நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 15 சதவிகித வருமானம் செல்போன் பிசினஸ் மூலமாக கிடைப்பதற்கான வேலை செய்து வருகிறோம் என எல்ஜி நிறுவனத்தின் எம்டி தெரிவித்துள்ளார். 
ஆனால் தற்போது இந்த நிறுவனத்தின் செல்போன் விற்பனை பிரிவின் சந்தை பங்களிப்பு 5 சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ளது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close