Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரசின் மானியத்தால் விற்பனை அதிகம் - க்ரீன் வாகனம்

 நேரடி பண சலுகை வழங்கியதான் விளைவாக ஏப்ரல், மே மாதத்தில் க்ரீன் வாகனத்தின் விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த பண மானியத்தை வாடிக்கையாளருக்கு நேரடியாக வழங்குகிறது. அதாவது இரண்டு சக்கர வாகனம் வாங்குபவர்களுக்கு ரூ.19 ஆயிரமும், காருக்கு ரூ.1.3 லட்சமும்  பண மானியம் வழங்கப்படுகிறது.  இதனால் 2015ம் ஆண்டு  இரண்டு மாதங்களில் மட்டும் (ஏப்ரல், மே) இரண்டு சக்கர வாகனங்கள் 25 ஆயிரத்துக்கு மேல் விற்பனையாகி உள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் ஆயிரம் வாகனங்கள்தான் விற்பனையாகி இருந்தது. இதனால் டிமான்ட் அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்களிடமும் பாசிட்டிவ் சென்டிமென்ட் உருவாகி உள்ளது. 
இந்தியாவின் பெரிய நிறுவனங்கள் ஒரு வருடத்துக்கு சுமார் 18 மில்லியன் வாகனங்களை தயாரிக்கிறது. ஆனால் ஒருவருடத்துக்கு சில நூறு எலக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே தயாரிக்க முடிகிறது. அரசு வழங்கும் நேரடி பணமானியத்தால் இந்த வாகனங்களின்  விற்பனை மற்றும் அது குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடையே அதிகரித்து வருகிறது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ