Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யோகா ஆசிரியர்களுக்கான தேவை 30-35% உயரும்!

உலக சுகாதார மையத்தின் தகவல்படி (டபிள்யூஹெச்ஓ) மன அழுத்தத்தால் 35 கோடி நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பணி புரியும் சூழல், உடல் உபாதைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளால் மன அழுத்ததுக்கு உள்ளாகுபவர்கள் மிக அதிகம் என்பது தெரியவந்திருக்கிறது. நேற்று (21.6.15) சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டது. இதற்காக நமது மத்திய அரசாங்கம் தலைநகர் டெல்லியில் மிகப்பெரிய யோகா திடலையே நேற்று அமைத்திருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட 35,000-ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சியை மேற்கொண்டன.

இந்த வகையில் மத்திய அரசு யோகா மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதால் இன்னும் சில வருடங்களுக்குள் யோகா ஆசிரியர்களுக்கான தேவை 30-35% உயரும் என்கிற விஷயத்தை அசோசேம் அமைப்பு தெரிவித்துள்ளது. உடல் நலம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால் யோகாவுக்கான தேவை உயர்வதாக அசோசெம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமை வருங்காலத்திலும் தொடரும் என்றும் கணித்திருக்கிறது. ஆயூர்வேதம், கார்ப்பரேட் பயற்சி, விடுமுறை கொண்டாட்டம் என யோகாவுக்கு பல பில்லியன் டாலர் சந்தை உள்ளதாக அசோசேம் பொதுச்செயலாளர் டி.எஸ்.ராவத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே தென் இந்தியர்கள்தான் அதிகளவில் யோகா பயற்சியை செய்கிறார்கள் எனவும், குறிப்பாக 30 முதல் 70 வயதுள்ள தென் இந்தியர்களில் 15% பேர் யோகா பயற்சி செய்கிறார்கள் எனவும் என்பதை தெரிவித்துள்ள அசோசெம், 2001-ம் ஆண்டு இந்தியாவில் 63 லட்சமாக இருந்த யோகா பயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கை, 2013-ல் 1.43 கோடியாக அதிகரித்துள்ளது என்கிற விவரத்தையும் குறிப்பிட்டுள்ளது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ