Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்கு தரகரை புகார் தெரிவிப்பது எப்படி?

பங்குத் தரகு நிறுவனம் பற்றியோ அல்லது பங்குத் தரகரை பற்றியோ செபியிடம் புகார் தெரிவிக்க வேண்டும். அதற்கு ஏதாவது மின்னஞ்சல், வலைதள முகவரி கிடைக்குமா?

ஆர்.பெருமாள் விருத்தாசலம்.

வி.நாகப்பன், பங்குச் சந்தை நிபுணர்.

‘‘http://scores.gov.in/Default.aspx என்கிற இணையதளத்தின் மூலம் புகார் பதிவு செய்யலாம் (Complaint Registration). இந்த இணைப்பை சொடுக்கியவுடன்  உங்கள் பெயர், ஊர், மாநிலம், பான் எண் விவரம், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்கள் கேட்கப்படும். அதற்குக் கீழ் நீங்கள் புரோக்கர்ஸ் / ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் என்கிற பிரிவில்  தரகரைப் பற்றியோ அல்லது தரகு நிறுவனத்தைப் பற்றியோ புகார் தெரிவிக்கலாம். நீங்கள் புகார் தெரிவித்தவுடன் புகார் பதிவு எண் வழங்கப்படும். ஒருவேளை இதற்கு முன்பே செபியிடம் உங்கள் புகாரை தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றாலும் உங்களுக்கு வழங்கப்பட்ட புகார் பதிவு எண்ணை வைத்து, இதே இணையதளத்தில் உங்கள் புகாரை செபிக்கு மீண்டும் நினைவுபடுத்தவும் முடியும்.’’

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ