Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஆன்லைனில் செய்ய முடியுமா?

 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்து யூனிட்டுகளை வாங்கினால், அந்த யூனிட்டுகளை ஃபிசிக்கல் ஃபார்மில் நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியுமா அல்லது டீமேட் கணக்கில் அந்த யூனிட்டுகளை   டீ-மெட்டீரியலைஸ் செய்ய வேண்டுமா? 

ஆர்.அனந்தபத்மநாபன், மலேசியா,

என்.சத்தியமூர்த்தி,

ரிசர்ச் அனலிஸ்ட், ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம்.

‘‘மியூச்சுவல் ஃபண்டில் மூன்று விதங்களில் முதலீடு செய்ய முடியும். 1. மியூச்சுவல் ஃபண்ட்  தரகர், 2. பிஎஸ்இ  (BSE), என்எஸ்இ (NSE) தரகர், 3. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இணையதளம் மூலம் முதலீடு செய்யலாம். நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் தரகர், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இணையதளம் மூலம் முதலீடு செய்தால், உங்கள் யூனிட்டுகள் பிசிக்கல் ஃபார்மில் கிடைக்கும். இப்படி பிசிக்கல் ஃபார்மில் கிடைக்கும் யூனிட்டுகளை எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். பிற்காலத்தில் பணத்தைத் திரும்பப் பெற (Redeem) பிசிக்கல் ஃபார்மில் இருக்கும் யூனிட்டுகளின் ஃபோலியோ எண், திட்டத்தின் பெயர் போன்றவைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். வேண்டுமானால் டீமேட் கணக்கு தொடங்கி உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை டீ-மெட்டீரியலைஸ் செய்துகொள்ளலாம். பங்குத் தரகர்கள் மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தால், மியூச்சுவல் ஃபண்டுகளின் யூனிட்டுகள் டீமேட் செய்யப்பட்டிருக்கும். டீமேட் கணக்கில் மியூச்சுவல் ஃபண்டுகளின் யூனிட்கள் டீ-மெட்டீரியலைஸ் செய்யப்பட்டிருந்தால், ஃபோலியோ எண், திட்டத்தின் பெயர் போன்றவற்றைப் பாதுகாக்க வேண்டியதில்லை. டீமேட் விவரம் மட்டும் தெரிந்தால் போதும்.’’

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ