Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குழந்தைகளின் உயர்கல்விக்கான ஃபண்டுகள்!

 ஐசிஐசிஐ புரூ. ஃபோகஸ்டு புளூசிப்,  ஐசிஐசிஐ புரூ. ரெகுலர் சேவிங்ஸ், எல் அண்ட் டி புரூடன்ஸ் ஆகிய ஃபண்டுகளில் மாதம் ரூ.1,000 முதலீடு செய்கிறேன். தவிர, மாதத்துக்கு ரூ.2,000 வீதம் ஐசிஐசிஐ எக்ஸ்போர்ட்ஸ் அண்ட் அதர் சர்வீசஸ்,  ஃபிராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஆகிய ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா? இந்த முதலீடு  என் குழந்தைகளின் உயர் கல்வி மற்றும் என் ஓய்வுக் காலத்துக்கு உதவுமா? 

எம்.எஸ்.ராமசுப்ரமணியன்

எம்.வெங்கடேஸ்வரன், நிதி ஆலோசகர்.

‘‘நீங்கள் ஐசிஐசிஐ புரூ. ஃபோகஸ்டு புளூசிப் ஃபண்ட் மற்றும் எல் அண்ட் டி இந்தியா புரூடன்ஸ் ஃபண்டிலும் முதலீடுகளைத் தொடரலாம். இந்த இரண்டு ஃபண்டுகளும் சிறப்பாகச் செயல்பட்டு அதன் பெஞ்ச்மார்க்குகளைவிட நல்ல வருமானத்தைத் தந்திருக்கின்றன.

அதேநேரத்தில் நீங்கள் தற்போது ஐசிஐசிஐ புரூ. ரெகுலர் சேவிங்ஸ் ஃபண்டில் செய்துவரும் 1,000 ரூபாய் முதலீட்டை ஐசிஐசிஐ புரூ. ஃபோகஸ்டு ப்ளூசிப் ஃபண்டிலேயே செய்யலாம்.

நீங்கள் புதிதாக எஸ்ஐபி முறையில் மாதம் 2,000 ரூபாய் முதலீடு செய்ய இருப்பதை குறிப்பிட்டிருக்கிறீர்கள். அந்த தொகையை ஃபிராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்டில் முதலீடு செய்யலாம். ஐசிஐசிஐ எக்ஸ்போர்ட்ஸ் அண்ட் அதர் சர்வீசஸ் ஃபண்ட் ஒரு துறை சார்ந்த ஃபண்டாக இருப்பதால், அந்த ஃபண்டை தவிர்ப்பது நல்லது.’’

 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ