Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேரள வங்கிகளில் என். ஆர். ஐ க்களின் வைப்பு நிதி ரூ. 1 லட்சம் கோடி

 கடந்த நிதி ஆண்டில் (2014-15) வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் கேரளாவில் இருக்கும் வங்கிகளில் சுமார் ரூ. ஒரு லட்சம் கோடி வரைக்கும் வைப்பு நிதியாக முதலீடு செய்துள்ளனர் என்று மாநில அளவிலான வங்கியாளர் குழுவிலிருந்து வெளிவந்த செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. 
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் கேரளாவில் இருக்கும் வங்கிகளில் வைப்பு நிதியாக முதலீடு செய்வது ஆண்டுக்கு ஆண்டுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது 
மார்ச் 2013 ரூ.66,190 கோடியாக இருந்த வைப்பு நிதி மார்ச் 2014 முடிவில் ரூ. 93,883 கோடியாக உயர்ந்திருக்கிறது. மேலும் கடந்த நிதி ஆண்டில் (மார்ச் 2015)ரூ.1,09,603 கோடியாக உயர்ந்திருக்கிறது என்று செய்தி அறிக்கை தெரிவிக்கிறது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ