Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறு சேமிப்பு முதலீடு 57 சதவிகிதம் குறைவு!

 சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது 56.59 சதவிகிதம் குறைந்துள்ளது.  ஜனவரி 2014-2015 காலக் கட்டத்தில்  சேமிப்பு விகிதம் வெகுவாக குறைந்திருக்கிறது என தேசிய சேமிப்பு நிறுவனம், நாக்பூர்  தெரிவித்துள்ளது. 

11 மாநிலங்களில் சிறு சேமிப்பு சதவிகிதம் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணம், புதிய முதலீடுகளில்  செய்வதற்காக பழைய முதலீடுகளை வெளியே எடுக்கப்பட்டுள்ளது. ஆக நிகர சிறு சேமிப்பு வசூலானது 2014ம் ஆண்டு ரூ. 9,948  கோடியாக இருந்த முதலீடு ரூ.4,318 கோடியாக குறைந்துள்ளது.
இதே நேரத்தில் 2015ம் வருடம் புதிதாக அறிவிக்கப்பட்ட முதலீட்டு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 2015-16  சுகன்யா சும்ரிதி  சேமிப்பு திட்டத்துக்கு 9.1 லிருந்து 9.2 சதவிகிதமாகவும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்துக்கு 9.2 சதவிகிதத்திலிருந்து 9.3 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ