Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பணத்துக்கு பதில் டெபிட் ,கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் வரிச்சலுகை

 

 
 
மத்திய நிதி அமைச்சர்  அருண் ஜெட்லி தனது பட்ஜெட் உரையில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வழியாக மேற்கொள்ளப்படும் வர்த்தக பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தவும், ரூபாய் நோட்டுக்களின் பயன்பாட்டை குறைக்கவும் மத்திய அரசு விரைவில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் என்று கூறி இருந்தார்.

ரூபாய் தாள்களை அச்சிடுவதற்கான செலவுகள் அதிகமாகிறது. பணத்திற்கு மூலப் பொருளான காகிதம் மரத்திலிருந்து தான் கிடைக்கிறது. காகிதத்திற்காக மரத்தை அழிப்பதால் சுற்றுச் சூழலுக்கும் தீங்கு ஏற்படுகிறது. சுலபமாக கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் வந்துவிடுகிறது. மக்கள் பணத்தை கையாளும் போது சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது இதையெல்லாம் கருத்தில் கொண்டு நாட்டில் ரூபாய் நோட்டுக்களின் பயன்பாட்டை குறைக்கவும் , சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் மத்திய அரசு பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளது .
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வோருக்கு வரிச் சலுகை மற்றும் வருமான வரிச் சலுகை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 
சமையல் எரிவாயு, பெட்ரோல் , ரயில் டிக்கெட்டுகளை கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி வாங்கும் போது செலுத்தப்படும் பரிவர்த்தனை கட்டணத்தையும் ரத்து செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது 
 
ரூபாய் 1 லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வழியாக மேற்கொள்வது கட்டாயமாக்கப்படும் .
டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை ஏற்றுக்கொள்ளும் கடை உரிமையாளர்களுக்கும் வரிச் சலுகை அளிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது . கடை உரிமையாளர் ஒருவர் 50% பண பரிமாற்றத்தை டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு வழியாக மேற்கொண்டால் வாட் வரியில் ( மதிப்புக் கூட்டு வரி) 1-2 சதவிகிதம் வரை சலுகையை பெற முடியும் 

அரசு வழங்குகிற சேவைகளை கார்டுகள் மூலம் மேற்கொண்டால் சில சலுகைகளும் அளிக்கப்படும். பிஎஸ்என்எல் சேவைக்கான கட்டணத்தை டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் செலுத்தினால் 1 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும். 
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி அரசு துறைகளில் வரி , அபராதம் மற்றும் கட்டணத்தை செலுத்தும் வசதியை ஏற்படுத்தவும் , ரூபாய் நோட்டுக்கள் இல்லாத பொருளாதாரத்தை உருவாக்கவும் ,வரி செலுத்தாமல் இருப்பதை , வரி செலுத்தாமல் ஏமாற்றுவதை குறைக்கவும், கள்ள நோட்டு புழக்கத்தை குறைப்பதும்  ,தனி நபர்களின் வணிக பரிமாற்றங்களை சேகரிப்பதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் 
 
இந்த திட்டங்கள் குறித்து பொது மக்கள் வருகிற 29–ந் தேதிக்குள் 
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் தங்களின் 
கருத்துக்களை பதிவு செய்யலாம் 
 

                                                                                                                                                                               த.சக்திவேல்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close