Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய வருமான வரி படிவங்கள் அறிமுகம்

வருமான வரித் துறை 2015 - 2016 தணிக்கை ஆண்டுக்கு அதாவது 2014 - 2015 நிதி ஆண்டு வருமான வரி தாக்கலுக்கு புதிய வருமான வரி படிவத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்தப் படிவம் பழைய 14 பக்கத்திற்கு பதிலாக மூன்று பக்கங்கள் மட்டுமே கொண்டதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. 
 
வரி செலுத்தும் தனி நபர்கள், நிறுவனங்கள் அனைவரும் வரும் ஆகஸ்ட் 31 2015 வரை வருமான வரி படிவங்களை தாக்கல் செய்யலாம். ஐடிஆர் - 2ஏ படிவம் மிகவும் எளிமைபடுத்தபட்ட படிவமாக இருக்கிறது. இந்த படிவத்தை தனி நபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பம் போன்றவர்களுக்கு பிசினஸ் வருமானம், ப்ரொஃபெஷன் வருமானம், மூலதன ஆதாய வரி இல்லாதவர்கள், வெளிநாட்டில் சொத்துகள் இல்லாதவர்கள் தாக்கல் செய்யலாம். 

இந்தப் படிவத்தை தாக்கல் செய்யும் போது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருந்தால், பாஸ்போர்ட் எண் மட்டும் கேட்கப்படுகிறது. அதோடு வங்கிகளில் எத்தனை சேமிப்பு கணக்குகள் மற்றும் நடப்பு  கணக்குகள் இருக்கிறது என்கிற விவரங்களை ஐஎஃப்எஸ்சி எண் உடன் வழங்கினால் போதும். அதே போல் செயல்படாத கணக்குகளை பற்றிய விவரங்கள் வழங்கத் தேவை இல்லை என்பது குறிப்பிட்டத்தக்கது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ