Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆறு மாதமாக சம்பளம் கொடுக்காத யுனிடெக்..!

 கட்டுமானத் துறை நிறுவனமான யுனிடெக், ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

மூலத்தில் வரி பிடித்தம் ( டிடிஎஸ்), பி.எஃப் யையும் கூட யுனிடெக் நிறுவனம் சரியாக செலுத்தவில்லை.. வாடிக்கையாளர்களுக்கு சொன்ன தேதியில் வீடுகளை கட்டி முடித்து தரவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. 

பலபேரின் சம்பளம் ஆறு மாதங்களுக்கு மேலாக கொடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. 

யுனிடெக் ஊழியர் ஒருவர்,  செப்டம்பர் 2014 ல் கிடைக்க வேண்டிய சம்பளம் ஏப்ரல் 2015 ல் தான் கிடைத்தது என்று சொல்லி இருக்கிறர் 
பணியாளர்களிடம் பிடிக்கப்பட்ட பி எஃப் பணம் கடைசியாக மார்ச் 2014 இல் கட்டப்பட்டுள்ளது , டிசம்பர் 2013 இல் டிடிஎஸ் கடைசியாக கட்டப்பட்டுள்ளது. 
நிறுவனத்தில் பணப்புழக்கம் குறைந்ததால்  ஏற்பட்ட பிரச்னையால் சரியாக சம்பளம் கொடுக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ