Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாடகைக்கு வீடு எடுக்கும் போது கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்!

சொந்த வீடு வாங்க முடியாதவர்கள், வேலை, படிப்பின் காரணமாக வெளியூரில் வசிப்பவர்கள், இப்படி பல காரணங்களினால் வாடகை வீட்டில் வசிக்க வேண்டிய சூழ்நிலையில் பலரும் இருக்கிறார்கள். வாடகைக்கு வீடு எடுக்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
 
1. வாடகைக்கு வீடு எடுக்கும் போது அதற்கு அக்ரிமென்ட் போடுவது முக்கியம். அதில் வாடகைக்கு வீடு எடுப்பவர்கள், வீட்டின் உரிமையாளர் இருவரின் முழுபெயர், நிரந்தர முகவரி, வயது ஆகியவை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
 
2. மாத வாடகை தொகை எவ்வளவு, அட்வான்ஸ் தொகை எவ்வளவு, அக்ரிமென்ட் காலம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். மாத வாடகையை போல 10 மடங்கு தொகை அட்வான்ஸாக வசூலிக்க முடியும். மாதம் ரூ.20 ஆயிரம் வாடகை கொடுக்கிறீர்கள் எனில் ரூ.2 லட்சம் அட்வான்ஸ் கொடுக்க வேண்டியிருக்கும். இந்த தொகை வீட்டின் உரிமையாளரை பொறுத்து மாறும். பெரும்பாலும் அட்வான்ஸ் தொகை அதிகமாக இருக்கும். அதை அக்ரிமென்டில் குறிப்பிடுவது நல்லது. ஏனெனில் எதாவது பிரச்னை வரும் போது பணத்தை திரும்ப பெற இது உதவியாக இருக்கும். மேலும் எவ்வளவு நாளைக்கு அக்ரிமென்ட் செல்லும் என்பதையும் குறிப்பிட வேண்டும். அதேபோல தொடர்ந்து அக்ரிமென்டை புதுப்பிப்பது அவசியம்.
 

3.   குடியிருக்கும் வீட்டில் டியூசன் எடுக்க கூடாது, வீட்டிலே சின்னதாக எதாவது தொழில் செய்ய கூடாது, சுவரில் ஆணி அடிக்க கூடாது, மாடியில் செடி வைக்கக் கூடாது சில வீட்டு உரிமையாளர்கள்  சொல்லுவர்கள்.இதையும் முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்டால் பல பிரச்னைகளை தவிர்க்க முடியும்.
 

4. கூடுதலாக எதற்கெல்லாம் பணம் கொடுக்க வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். சில வீடுகளில் மின்சாரக் கட்டணம் அதிகமாக வசூலிப்பார்கள். அதாவது அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக ஒரு யூனிட்டுக்கு ரூ.5,6 என வசூலிப்பார்கள். மேலும் தண்ணீருக்கு தனியாக, கழிவு நீர் வெளியே எடுப்பதற்கு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பணம் கேட்பார்கள். இதையெல்லாம் முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
 
5. வாடகைக்கு போகும் வீட்டில் உள்ள சில பொருட்கள் சேதம் அடைந்தால் அல்லது பழுதடைந்தால் யார் பொறுப்பு என்பதையும் பார்க்க வேண்டும். அதாவது தண்ணீர் பைப் உடைவது, ஜன்னல் கண்ணாடி, வீடு தரையில் உள்ள டைல்ஸில் எதாவது கீறல் விழும் போது யார் அதை சரி செய்ய வேண்டும் என்பதை தெரித்துக் கொள்ள வேண்டும். சில வீடுகளில் பேன், ஏசி, லைட் ஆகியவற்றை வீட்டின் உரிமையாளரே போட்டு வைத்திருப்பார். இது பழுது அடையும் போது அதை யார் சரி செய்ய வேண்டும் என்பதையும் பார்க்க வேண்டும்.
 
6.நோட்டீஸ் பிரீயட் எவ்வளவு நாட்கள் என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். வீடு காலி செய்வதை எவ்வளவு நாளை முன் தெரிவிக்க வேண்டும் என்பதையும்,அந்த சமயத்தில் எதாவது கூடுதல் கட்டணம்( வீட்டில் சுண்ணாம்பு அடிப்பதற்கு) உள்ளதா என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 
 

இரா.ரூபாவதி.
 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ