Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

100 ரூபாய் நோட்டுகளில் புதிய மாற்றம்!

 
கள்ள நோட்டுகளின் புழக்கத்தை தடுப்பதற்காக ஆர்பிஐ ரூபாய் நோட்டுகளில் புதிய மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றம் மகாத்மா காந்தி - 2005 வரிசை நோட்டுகளில் கொண்டுவர உள்ளது. 2005-க்கு முன் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கியின் மூலமாக ஆர்பிஐ திரும்ப வாங்கி வருகிறது. இப்போது புதிதாக அச்சடிக்கப்பட உள்ள நோட்டுகளில் குறிப்பிடப்படும் எண்கள் ஏறுவரிசையில் இருக்குமாறு அச்சடிக்கப்பட உள்ளது. அதாவது எண்களின் அளவு ஏறுவரிசையில் இருக்கும். 
மேலும் இந்த புதிய ரூபாய் நோட்டுகளில் ரூபாய் குறியீடு மற்றும் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனின் கையெழுத்து இருக்கும். இந்த மாற்றங்களை ரூ.100 நோட்டுகளில் மட்டும் இல்லாமல் பிற நோட்டுகளிலும் கொண்டுவர உள்ளது. 
இந்திய ரூபாய் நோட்டுகளில் அதிக பாதுகாப்பு இருக்கும். இந்த மாற்றத்தின் மூலமாக கள்ள நோட்டுகளை மக்களே எளிதாக கண்டுபிடிக்க முடியும். மேலும் 2005க்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளும் காலத்தை டிசம்பர் 31ம் தேதிவரை ஆர்பிஐ நீட்டித்துள்ளது. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ