Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காபி டே ரூ. 1,150 கோடிக்கு பொதுப் பங்கு வெளியீடு

 இந்தியாவின் முன்னணி காபி ஷாப்களில் ஒன்றான கஃபே காபி டே வை நிர்வகிக்கிற காபி டே என்டர்பிரைசஸ் நிறுவனம் நாடு முழுவதும் புதிய கடைகளை திறப்பதற்கான நிதியை திரட்ட ரூ. 1,150 கோடி மதிப்பிலான பொதுப் பங்குகளை வெளியிட ( IPO ) செபியிடம் விண்ணப்பத்திருக்கிறது . 


காபி டே என்டர்பிரைசஸின் நிர்வாக இயக்குனர் வி ஜி சித்தார்த்தாவிடம் 54.78 சதவிகிதப் பங்குகள் உள்ளன.


பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் 1996 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 5000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 1530 கடைகள் இருக்கின்றன. ஆஸ்திரியா, செக், துபாய், மலேசியா, கெய்ரோ, எகிப்தில் கிளைகள் உள்ளன
கடந்த மூன்று வருடங்களில் சரியான இடத்தை தேர்வு செய்யாததால் ஏற்பட்ட குறைவு காரணமாக  இந்த நிறுவனம் 300க்கும் மேற்பட்ட  கடைகளை மூடியது குறிப்பிடத்தக்கது 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP