Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பழைய வீட்டைப் புதுப்பிக்க எங்கு அனுமதி வாங்க வேண்டும்?

 நாற்பது ஆண்டு காலப் பழைமையான எனது வீட்டின் ஒரு பகுதி முழுமையாக இடிந்துவிழும் நிலையில் இருக்கிறது. எனவே, அந்தப் பகுதியை மட்டும் முழுமையாக இடித்துவிட்டுப் புதிதாக இரண்டு அறைகளைக் கட்ட உள்ளேன். இதற்கு யாரிடமெல்லாம் அனுமதி வாங்க வேண்டும்?

பி.செந்தமிழ்செல்வன், திருவாரூர்.
பி.மணிசங்கர், தலைவர், ஃப்ளாட் அண்ட் ஹவுஸிங் புரமோட்டர்ஸ் அசோசியேஷன்.
“முதலில் நாற்பது ஆண்டுகால கட்டடத்தின் ஸ்திரத்தன்மையைப் பற்றி ஸ்ட்ரக்சுரல் இன்ஜினீயர் (Structural Engineer) மூலம் கட்டடத்தை முழுமையாகப் பரிசோதித்து, இடிக்கக்கூடிய பகுதியை இடிக்கும்போது மற்ற பகுதி கட்டடத்துக்கு எந்தச் சேதாரமும் வராமல் கட்ட முடியும் என்று ஸ்டெபிலிட்டி சர்ட்டிஃபிகேட் வாங்க வேண்டும். புதிதாக இரண்டு அறைகள் கட்ட தங்களுடைய கட்டடம் இருக்கும் நகராட்சி, மாநகராட்சி அல்லது பஞ்சாயத்தில் ரீமாடிஃபிகேஷன் திட்டத்தை அப்ரூவலுக்கு அனுப்பி, அனுமதி வாங்கிய பிறகு கட்டடத்தை இடித்துக்கட்டத் தொடங்க வேண்டும். ரீமாடிஃபிகேஷன் திட்ட அனுமதிக்கு, திட்டத்தை அனுப்பும்போது, கட்டடத்தின் ஸ்திரத்தன்மை பற்றிய ஸ்டெபிலிட்டி சர்ட்டிஃபிகேட்டும் உடன் இணைக்க வேண்டும். இந்த நடைமுறைகள் முடிந்த பிறகு கட்டடத்தை இடித்துக்கட்ட ஆரம்பிப்பது நல்லது.”
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ