Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ. 2 கோடி டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?

என் வயது 30. எண்ணெய் டேங்கர்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களில் மரைன் இன்ஜினீயராகப் பணியாற்றுகிறேன். இரண்டு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க விரும்புகிறேன். எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் குறைந்த பிரீமியத்தில் பாலிசி எடுக்கலாம்?

சங்கர் கணேஷ்,
மேத்யூஸ் பிரபாகரன், இயக்குநர், ஃபர்ஸ்ட் இன்ஷூரன்ஸ் வேர்ல்டு புரோக்கிங் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்
“உங்கள் வயதுக்கு இரண்டு கோடி ரூபாய்க்குத் தோராயமாக 20,000 ரூபாய் பிரீமியமாக வசூலிக்கப்படும். அதே நேரத்தில், புகைபிடிக்கும் பழக்கம் இருக்கும்பட்சத்தில் பிரீமியம் 27,000 ரூபாய் வரைகூட வசூலிக்கப்படும். இந்த பிரீமியத்துக்கு 14% சேவை வரியையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக, அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் டேர்ம் இன்ஷூரன்ஸ் வழங்குகிறது. எனவே, உங்களுக்குத் தகுந்தாற்போல் விதிமுறைகள் உள்ள நிறுவனத்தில் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளலாம். பிர்லா சன் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் மிகவும் குறைந்த பிரீமியத்தில் டேர்ம் பாலிசியை அளித்து வருகிறது.”
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ