Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிரீஸில் என்ன பிரச்சினை!

 கிரீஸ் சிறிய நாடுதான். ஆனால் அங்குள்ள பிரச்னை தற்போது மிகப் பெரியதாக உள்ளது. உலக ஜிடிபியில் கிரீஸின் பங்களிப்பு 0.5 சதவிகிதம்தான். கிரீஸ் இந்த மாத இறுதிக்குள் ( ஜூன் 30) சர்வதேச நாணய நிதியத்துக்கு (International Monetary Fund) 1.6 பில்லியன் யூரோ கடனை திரும்பச் செலுத்த வேண்டும். ஆனால் கிரீஸ் அரசிடம் பணம் இல்லை. இதன் விளைவாக அந்த நாட்டின் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாளில் ஏடிஎம் மூலமாக ஒரு நபர் 60 யூரோ மட்டும்தான் எடுக்க முடியும் என கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டில் உள்ள ஏடிஎம் வாசல்களில்  50க்கும் அதிகமானவர்கள் பணத்தை எடுப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.கிரீஸ் பிரச்னை குறித்து பங்குச் சந்தை நிபுணர் எஸ். லெட்சுமணராமன் விளக்கிச் சொன்னார் 

   "கிரீஸ் நாட்டிற்குக் கடன் வழங்கும் நாடுகளும் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதாவது கிரீஸ் அரசு செலவுகளைக் குறைக்க வேண்டும், ஒய்வூதிய வயதை அதிகரிக்க வேண்டும். தற்போது ஓய்வு பெறும் வயது 57 ஆக உள்ளது. இதை 67 ஆக உயர்த்த வேண்டும். வயதை உயர்த்தினால் அரசின் மானிய சுமை குறையும். அதேபோல அந்த நாட்டின் வரி விதிப்பை அதிகப்படுத்த வேண்டும் என்பது கடன் வழங்கும் நாடுகளின் முக்கிய  நிபந்தனையாக உள்ளது
 
       இந்த நிபந்தனைகளை ஏற்று, பிற நாடுகளிலிருந்து கடன் வாங்கவில்லை எனில் ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து கிரீஸ் வெளியேற வேண்டிய சூழல் உருவாகும். மேலும் சர்வதேச நாணய நிதியத்துக்கு வழங்க வேண்டிய கடனை வழங்கவில்லை எனில் கிரீஸ் நாடு திவால் ஆகிவிடக்கூடிய சூழல் ஏற்படும் . கிரீஸ் வெளியேறினால் அதனுடன் இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் நிதி நெருக்கடியின் காரணமாக ஐரோப்பிய கூட்டணியிலிருந்து வெளியே வேண்டிய சூழல் உருவாகும். இது நடந்தால் கிரீஸில் அதிக வேலை  இழப்பு ஏற்பட்டு உள்நாட்டுக் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது.
 
 
       கிரீஸ் நாடு திவால் ஆவது அல்லது யூரோ மதிப்பு இழப்பு என எது நடந்தாலும் அதிகம் பாதிக்கப்படுவது அமெரிக்கா மற்றும் இந்தியாதான். ஏனெனில் யூரோ மதிப்பு இழந்தால் அமெரிக்கா டாலரின் மதிப்பு அதிக வலுவடையும். இதனால் வட்டி விகிதத்தைக் குறைக்க முடியாது. 
 
       இதேபோல இந்திய ரூபாயின் மதிப்பும் வலுவடையும். இந்திய ரூபாய் வலுவடைந்து யூரோவின் மதிப்பு சரியும் போது, ஏற்றுமதி அதிக அளவில் பாதிப்படைய வாய்ப்புள்ளது. அதாவது இந்தியாவின் ஏற்றுமதியில் 20 சதவிகிதம் ஐரோப்பிய நாடுகளை நம்பி உள்ளது. மேலும் இந்தியாவின் இறக்குமதியில் 17 சதவிகிதம் ஐரோப்பிய நாடுகளிலிருந்து செய்யப்படுகிறது.
 
 ஏற்றுமதி குறையும் போது உற்பத்தி செய்த பொருட்கள் தேக்கம் அடையும். இதனால் விலை குறையும் அபாயம் உருவாகும். யூரோ மதிப்பு குறையும் போது உற்பத்தி செலவின் மதிப்பை விடக் குறைவான அளவு தொகையே கிடைக்கும். மேலும் சில நேரத்தில் ஆர்டர் ரத்தாகும் சூழ்நிலையும் உருவாகும். இதனால் நிறுவன பங்குகளின் விலையில் மாற்றக் கூடும்" 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ