Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்துக்கு விருது

 
பாஸ்போர்ட்க்கான சேவையை சிறந்த முறையில் வழங்கி வருவதற்காக, சென்னை மண்டல அலுவலகத்துக்கு சிறப்பு விருதினை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
 புதுடெல்லியில் அண்மையில் நடைபெற்ற அகில இந்திய பாஸ்போர்ட் அதிகாரிகள் கூட்டத்தில் இந்த விருதினை சென்னை மண்டல அதிகாரி  க.பாலமுருகனிடம், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வழங்கினார். 
கடந்த நிதியாண்டில் (2014-15), சிறப்பான சேவைகள் வழங்கியதை பாராட்டும் வகையில் இந்த விருது (National award of Certificate of Appreciation) வழங்கப்பட்டுள்ளதாக க. பாலமுருகன் சென்னையில் தெரிவித்தார்.
 
சென்னை மண்டலத்தில் கடந்த நிதி ஆண்டில் மட்டும் 4,14,892 பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளன.
 
வரும் செப்டம்பர் மாத இறுதியில் புதுச்சேரியில் புதிதாக பாஸ்போர்ட்  சேவை மையம் திறக்கப்பட உள்ளது. அதில், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இதனால், அவர்கள் சென்னை வருவது தவிர்க்கப்படும். இந்த மையம் முழுவதும் வெளியுறவுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்களால் நிர்வகிக்கப்படும். மாநிலத்தின் பிற பகுதிகளில் விண்ணப்பங்களைப் பரிசீலித்து புகைப்படம், கைரேகைகளைப் பதிவு செய்யும் பணியை டிசிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ