Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிரீஸ் பிரச்னை நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி பதில்

கிரீஸ் பிரச்னையால் பங்குச் சந்தை என்ன ஆகும்? உங்கள் கேள்விகளுக்கு நாணயம் விகடன் ட்விட்டரில் பங்குச் சந்தை நிபுணர் எஸ். லெட்சுமணராமன் பதில் அளித்துக் கொண்டிருக்கிறார்.

கிரீஸ் பிரச்னையினால் கடந்த ஒரு வாரமாக சர்வதேச பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் 50,000 கோடி டாலர்  (ரூ.31,50,000 கோடி) அளவுக்கு இழந்துள்ளார்கள்.  இந்த நிலை தொடருமா?

"பங்குச் சந்தை என்பது எப்போதுமே ஏற்ற இறக்கம் கலந்துதான் இருக்கும். கிரீஸ் நாட்டில் நிகழ்வது போல பிரச்னை  ஏற்படும் போது அதனுடைய பாதிப்பு பங்குச் சந்தையிலும் எதிரெலிக்கும்.  இது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு தொடரும். அங்கு நிலவும் பிரச்னைகள் முடிவுக்கு வரும் போது அல்லது முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உருவாகும் போது சந்தை உயர துவங்கும்.

குறிப்பாக கிரீஸில் வருகிற ஜூலை 5 ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதில் கிரீஸிக்கு பண உதவி செய்பவர்களின் (ஐஎம் எஃப்,ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய கமிஷன்) நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என்பதை அந்த வாக்கெடுப்பின் முடிவு எடுக்கப்படும்.

அதன்பின் கிரீஸ் பிரச்னை முடிவுக்கு வருமா அல்லது தொடருமா என்பது தெரிய வரும்.  அதுவரை அதனுடைய பாதிப்பு பங்குச் சந்தையில் மட்டும் அல்லாமல்  கரன்சி, பாண்டு சந்தையிலும்  பாதிப்பு இருக்கும். "

இன்று (ஜூன் 30) சர்வதேச நிதியகத்துக்கு கிரீஸ் கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்?

"கிரீஸ் இன்று (ஜூன் 30) பணத்தை திரும்ப செலுத்தவில்லை எனில் சர்வதேச அளவில் கிரீஸ் மதிப்பு குறையும். ஏற்கனவே, நிதி உதவி செய்து வந்த ஐஎம் எஃப் அமைப்பிடம் இருந்து மீண்டும் நிதியுதவி பெறுவது சிக்கலாகும்.

ஐஎம்எஃப் வரலாற்றில் பெரிய அளவு கடனை தொகையை திரும்ப பெற முடியாமல் சிக்கலுக்கு உட்படுவது இதுவே முதல்முறை. இதனால் ஐஎம்எஃப்  அமைப்பை  பாதிப்புக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது."

 

கிரீஸ் பிரச்னையால் தங்கம்,வெள்ளி என்னாகும். தொடர்ந்து  சரிந்து வருகிறதே?
"கிரீஸ் பிரச்னையால் அமெரிக்க டாலருக்கு நிகரான யூரோவின் மதிப்பு குறைகிறது. முதலீட்டாளர்கள் ஐரோப்பிய நாடுகளின் கடன் பத்திரங்களில் உள்ள முதலீட்டை திரும்ப பெற்று, தற்போது அதிக பாதுகாப்பு என கருதப்படும் அமெரிக்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்து வரலாம். 
 
இதன் காரணமாக, அமெரிக்க டாலரின் மதிப்பு உயரக்கூடும்.  டாலரின் மதிப்பு உயரும் போது சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சற்று சரிய வாய்ப்பு உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை சர்வதேச அளவில் தங்கத்தின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகிய இரண்டையும் பொறுத்து உள்நாட்டில் தங்கம் வர்த்தகமாகும் விலை தீர்மானிக்கப்படும்."

கிரீஸ் பிரச்னை காரணமாக எந்த எந்த துறைக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும் ?

கீரிஸ் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் நேரிடையாக வர்த்தகத்தில் பெரிய தொடர்பு எதுவும் இல்லை. இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் செய்வதில் ஐரோப்பிய நாடுகளே முதலிடத்தில் உள்ளன. இந்தியாவிலிருந்து 20% ஏற்றுமதி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறது. இந்தியா , ஐரோப்பாவிலிருந்து 17% சதவிகிதம் இறக்குமதி செய்கிறது .
 
இந்த கிரீஸ் பிரச்னையால் யூரோவின் மதிப்பு குறையும் போது நம் நாட்டின் ரூபாயின் மதிப்பு உயரும். இதனால் ஏற்றுமதியாளர்களுக்கு வருமானம் குறைவதற்கான வாய்ப்பிருக்கிறது. சில சமயங்களில் ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் ரத்து ஆகுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
 
யூரோ மதிப்பு குறைந்து ரூபாயின் மதிப்பு உயரும் போது அங்குள்ள நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை இந்தியாவின் மீது திணிக்கலாம். இது இந்திய நிறுவனங்களின் உள்நாட்டு விற்பனைகளை பாதிக்கலாம். இது மட்டுமில்லாமல் இந்திய நிறுவனங்களுக்கு துணை நிறுவனங்கள் ஐரோப்பாவில் உள்ளன, அந்த நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் வருமானமும் பாதிக்கப்படலாம்.  
 
சில துறைகள் என்று இல்லாமல் ஐரோப்பாவுடன் வர்த்தகம் செய்யும் எல்லா துறைகளையும் பாதிக்க வாய்ப்புள்ளது. இதில் சாதகமான விஷயம் ஒன்று உள்ளது. நிறுவனங்கள் யூரோவில் கடன் வாங்கியிருந்தால் யூரோவின் மதிப்பு குறையும் போது அதற்கு தகுந்த மாதிரி கரன்சியை மாற்றிக்கொடுத்தால் சேமிக்கவும் முடியும் 

 2007 இல் கிரீஸில் அதன் கடனுக்கும் ஜிடிபிக்கும் உள்ள விகிதம் 89.5% ஆக இருந்தது. அது 2014-ல் 174.5% ஆக உயர்ந்தது. இது இன்னும் கூடினால் என்ன ஆகும்? 

கிரிஸ் என்று இல்லாமல் வேறு எந்த நாடாக இருந்தாலும் கடனுக்கும் ஜிடிபிக்கும் உள்ள விகிதம் அதிகமானால் கிரெடிட் ரேட்டிங் மதிப்பு பெரியளவில் குறையலாம் இந்த கடன் அதிகமாக இருப்பது அந்த நாட்டின் நிதி நிலை பற்றாக்குறையை காட்டுகிறது, அந்த நாட்டின் அரசு செய்யக்கூடிய செலவினங்கள் வரவை விட அதிகமாக இருப்பதை காட்டுகிறது.
 
உள் நாட்டில் பண வீக்கம் அதிகமாகும் கிரெடிட் ரேட்டிங் குறையும் கரன்சியின் மதிப்பு வெகுவாக குறையும். இவற்றையெல்லாம் கட்டுக்குள் கொண்டு வர  வட்டி விகிதங்கள் உயரக்கூடும் அது தொழில் வளர்ச்சியை பாதிக்கும். தொழில் வளர்ச்சி பாதித்தால் வேலையிலலா திண்டாட்டம் அதிகரிக்கும். இறுதியில் சமூகத்தில் ஒரு அமைதியினமையை ஏற்படும்.

 

 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ