Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகளாவிய மொபைல் சேவையில் ஏர்டெல் மூன்றாமிடம் !

 உலகளவில் மூன்றாவது மிகப்பெரிய செல்போன் சேவை நிறுவனமாக பார்தி ஏர்டெல் முன்னேறி இருக்கிறது. உலகம் முழுவதும் 20 நாடுகளில் சுமார் 30 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களை இந்த நிறுவனம் கொண்டுள்ளது.


உலக செல்லுலார் தகவல் மையம் வெளியிட்ட அறிக்கையின் படி சீனா மொபைல் 626. 27 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு முதலிடத்திலும் வோடபோன் குரூப் 403.08 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. பார்தி ஏர்டெல் 303.10 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் மூன்றாம் இடத்திலும் சீனா யுனிகாம் 299.09 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் நான்காம் இடத்திலும் அமெரிக்க மூவில் 274.14 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ