Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட் : மிஸ்டுகால் கொடுத்தால் பேலன்ஸ் தெரியும்..~!

மிஸ்டுகால்  மூலமாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பேலன்ஸ் தெரிந்துக் கொள்ள முடியும்.  அதாவது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்  தொகையின் தற்போதைய மதிப்பு என்ன என்பது குறித்து தெரிந்துக் கொள்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.   

ஃபண்ட் நிறுவனத்துக்கு நேரடியாக சென்று தெரிந்துக் கொள்ளலாம். மியூச்சுவல் யூனிட்களின் எண்ணிக்கை தெரிந்தால், மியூச்சுவல் ஃபண்ட் என் ஏவியுடன் அந்த யூனிட்டுகளை பெருக்கினால் மொத்த தொகையை தெரிந்துக் கொள்ள முடியும். 
இதேபோல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இலவச தொலைபேசி மையத்தை தொடர்பு கொண்டும் ஃபோலியோ எண்ணைக் கொடுத்து முதலீட்டின் மதிப்பை தெரிந்துக் கொள்ள முடியும். அடுத்தது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஸ்டேட்மென்ட் அனுப்பும். அதை வைத்தும் தெரிந்துக் கொள்ளலாம்.
ஆனால் தற்போது பிர்லா லைன்லைஃப் நிறுவனம் மிஸ்டுகால் மூலமாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மதிப்பை தெரிந்துக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது 89760 96036 என்ற பிர்லா சன்லைஃப் நிறுவனத்தின் எண்ணுக்கு உங்களின் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து மிஸ்டுகால் கொடுத்தால் உங்களின் ஃபண்டின் தற்போதைய மதிப்பு என்ன என்பது தெரிந்துக் கொள்ள முடியும்.

 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ