Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிரீஸ் பிரச்னை எப்போது தீர்வு!

 

கிரீஸில் ஒரு வாரத்துக்கும் மேலாகப் பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறது. நேற்று( ஜூன் 30) ஐஎம் எஃப்க்கு செலுத்த வேண்டிய 1.7பில்லியன் டாலர் கடனைச் செலுத்தவில்லை. பொருளாதார வளர்ச்சி அடையும் ஒரு நாடு கடனை சரியாகத் திரும்பச் செலுத்தாமல் இருப்பது இதுவே முதல்முறை. இதுவரை பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி இருந்த நாடுகள்தான் கடனை திரும்பச் செலுத்தாமல் இருந்தது. 
மேலும் கிரீஸ் அடுத்த இரண்டு வருடங்களுக்குத் தேவையான 29 பில்லியன் யூரோவை வழங்குமாறு ஐரோப்பிய யூனியனிடம் கேட்டுள்ளது. ஆனால் ஐரோப்பிய யூனியன் ஜூலை 5ம் தேதி நடைபெற உள்ள வாக்கெடுப்பின் முடிவுக்குப் பிறகுதான் எந்த முடிவடையும் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதற்கிடையே கிரீஸ் நாட்டின் நிதியமைச்சர் கூட்டம் இன்று(ஜூலை 1) நடைபெற உள்ளது. இதில் எடுக்கப்படும் முடிவை பெறுத்துதான் பிரச்னைகளுக்குத் தீர்வு எடுக்கப்படும்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP